Friday, January 28, 2011

காதல்

காதல் கனிந்து வந்து கையில் விழும் 


காலம் கூறும் மாங்கனி அல்ல!

தயக்கம் வந்து தலையைத் தாழ்த்தி 

நாணம் கொள்ளும் தலைவியின் இதழில் 

பூத்துக்குலுங்கும் தாமரை அல்ல! 

இருதயம் கலந்து இமைகள் மூடும் 

இனிய உறவே காதல் உறவு!

காதலே......

உன் வரவுக்கில்லை சாவேனும் கேடு!

காலம் சொல்லும் உன் சரித்திரச் சுவடு!

No comments:

Post a Comment