Friday, January 28, 2011

வாழ்க்கை


என்னையே உளியாக்கி

என்னையே செதுக்கும் 

சிற்பியே வாழ்க்கை!

தனிமை


என்னை வில்லாய் வளைத்து.....

பஞ்சாய்த் திரித்து.....

துணியாய்த் தரித்து.....

கண்ணீரில் துவைத்து......

செந்நீரில் நனைத்து......

தலையணையில் திணித்து......

சுகமாய்த் தூங்கப் பனிக்கிறது

அவள் இல்லாத தனிமை.....

காதல்

காதல் கனிந்து வந்து கையில் விழும் 


காலம் கூறும் மாங்கனி அல்ல!

தயக்கம் வந்து தலையைத் தாழ்த்தி 

நாணம் கொள்ளும் தலைவியின் இதழில் 

பூத்துக்குலுங்கும் தாமரை அல்ல! 

இருதயம் கலந்து இமைகள் மூடும் 

இனிய உறவே காதல் உறவு!

காதலே......

உன் வரவுக்கில்லை சாவேனும் கேடு!

காலம் சொல்லும் உன் சரித்திரச் சுவடு!